×

20 ஆண்டுகளுக்கு மேல் இருந்த வெறுப்பு... ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஏ.ஆர்.ரகுமான் !

 

 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்த ஆதங்கம்தான் ‘மாமன்னன்’ திரைப்படம் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதையடுத்து ஓடிடியிலும் வெளியான இப்படம் திரையரங்கை விட ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. குறிப்பாக வில்லனாக நடித்திருந்த பகத் பாசிலின் கதாபாத்திரம் ஓடிடியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் 50வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் உதயநிதி, வடிவேலு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்று 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த ஆதங்கம்தான் ‘மாமன்னன்’ படம். என்னுடைய இசையால் ஒன்று செய்ய முடியவில்லை. அதனால் இவர்களோடு சேர்ந்து கொண்டேன் என்று அவர் தெரிவித்தார்.