×

உதயநிதியின் ‘மாமன்னன்’ ரிலீஸ் எப்போது ?... புதிய அப்டேட் 

 

 உதயநிதியின் ‘மாமன்னன்’ படம் எப்போது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார். உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இவர்களுடன் வடிவேலு மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி இப்படத்தை வரும் ஜூன் மாதம் 29-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. இதே தேதியில் தான் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தையும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.