×

நாளை வெளியாகிறது ஜிகுஜிகு ‘ரெயில்’.. ‘மாமன்னன்’ அடுத்த பாடல் அப்டேட் 

 

‘மாமன்னன்’ படத்தில் இருந்து ஜிகுஜிகு ரெயில் என்ற பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் உள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பு நிறுவனம் செய்து வருகிறது. உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தை அந்நிறுவனமே வெளியிடவும் உள்ளது. 

அரசியல் மற்றும் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்னர். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். 

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து வடிவேலு பாடிய முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜிகுஜிகு ரெயில்’ என தொடங்கும் அந்த பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.