×

‘சூர்யா’வுடன் இணையும் ‘மேடி’– வெளியான செம தகவல்.

 

சூர்யாவின் 43 வது படத்தின் தகவல் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் படத்தின் வில்லன் குறித்த தகவல் வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு அப்டேட் வந்துள்ளது.

சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பின்னணியில் தயாராகும் இந்த படத்திற்காக அவர் கடுமையாக உழைத்து வருகிறார். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கதை என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனுடன் இணைந்து ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார். ஆனால் படப்பிடிப்பு தாமதமாகும் என்பதால் இயக்குநர் சுதா கொங்கரா உடன் கைகோர்த்துள்ளார். ‘சூர்யாவின் 43’வது படமாக தயாராகும் அந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார்.

தொடர்ந்து அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகையான நஸ்ரியா நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது. மேலும் துல்கர் சல்மான் மற்றும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிகை தமன்னாவின் காதலரும், இந்தி நடிகருமான விஜய் வர்மா நடிக்க போவதாகவும் தகவல் வந்தது. இந்த நிலையில் லேட்டஸ்டாக படத்தில் சூர்யாவுடன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க நடிகர் மாதவனுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.