ஓடிடியில் வெளியாகாத மத கஜ ராஜா... என்ன காரணம் தெரியுமா..?
Apr 25, 2025, 16:15 IST
மத கஜ ராஜா திரைப்படம் தற்போது வரை ஓடிடியில் வெளியாகவில்லை.
விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் மற்றும் பலர் நடித்து சுந்தர் சி இயக்கிய திரைப்படம் மத கஜ ராஜா. இந்த திரைப்படம் பல காரணங்களால் பல வருடங்களாக கிடப்பில் கிடந்தது. இந்த படத்தை மறுபடியும் தூசி தட்டி இந்த பொங்கலுக்கு திரையிட்டனர். திரையிட்ட எல்லா இடங்களிலும் நல்ல வசூலை பெற்றது. ஆனால் மூன்று மாதங்கள் கடந்தும் இந்த திரைப்படம் எந்த ஒரு ஓடிடி தளத்திலும் இதுவரை ஒளிபரப்பாகவில்லை.
நாம் விசாரித்த தகவலின் அடிப்படையில் இந்த திரைப்படம் காலம் கடந்து வெளியானதால் ஓடிடி உரிமையில் பல சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். கூடிய விரைவில் இதெல்லாம் சரியாகி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகள் முழு மூச்சாக நடப்பதாக சொல்கிறார்கள்.