'மதகஜராஜா' படத்திற்கு அமோக வரவேற்பு; நடிகர் விஷால் நெகிழ்ச்சி
Jan 12, 2025, 20:43 IST
விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் மதகஜராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.12 வருடங்களுக்கு முன்பு உருவாக்கி இப்போது வெளியாகியிருக்கும் படம் மதகஜராஜா. சுந்தர் சி இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் இந்த படத்தில் விஷால், சந்தானம், வர லட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரசிகர்களின் பல நாள் காத்திருப்பதற்கு மத்தியில் இப்படம் வெளியாக இருப்பதை தொடர்ந்து, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் , நடிகர் விஷால் நெகிழ்ச்சியாக ஒரு பதிவிட்டுள்ளார்.