×

சிவகார்த்திகேயனின் மதராஸி பட நகைச்சுவை கலந்த வீடியோ வெளியீடு ..

 

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான 'மதராஸி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர்  நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார்.
மதராஸி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். டாக்டர் படத்தில் எப்படி ஒரு பாடலின் ப்ரமோ வீடியோவை காமெடி வீடியோவோடு அறிவித்தார்களோ, அதே போல பிற படங்களுக்கு அறிவித்து வருகிறார் அனிருத். அந்த வகையில், சிவகார்த்திகேயன், அனிருத், ஏ.ஆர்.முருகதாஸ், பாடலாசிரியர் சூப்பர் சுப்பு உள்ளிட்டோர் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
இந்த வீடியோவில், அனைவரும் லுங்கி  கட்டிக்கொண்டு கேஷுவலாக அனிருத்தின் ஆபிஸிற்கு சென்று “பாடல் என்னாச்சு?” என்று கேட்பது போல டைலாக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த படத்திற்கு, “சலம்பல” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஹீரோ காதல் தோல்விக்கு பிறகு பாடுவது போல, இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/LNnOVLHAoYQ?si=BcQXjjmrP3DT8LNK