×

மாதவன் - நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படம்... விரைவில் தொடங்கும் ஷூட்டிங் !

 

மாதவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகர் மாதவன். அந்த வகையில் சமீபத்தில் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் பயோபிக்கை இயக்கி நடித்திருந்தார்.‌ இந்த படத்தின் வரவேற்பிற்கு பிறகு விஞ்ஞானி ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார்.‌இது குறித்த தகவல்கள் சமீபகாலமாக வெளியாகி வருகிறது. 

இந்நிலையில்‌ டெஸ்ட் கிரிக்கெட் கதைகளும் கொண்ட படத்தில் நடிகர் மாதவன் நடிக்க உள்ளார். மாதவனுடன் இணைந்து நடிகை நயன்தாரா, சித்தார்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இயக்குனர் சசிகாந்த் இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரித்து இயக்கவுள்ளார்‌.  

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். 'தி டெஸ்ட்' என்ற தலைப்பில் உருவாகும் இந்த படம் முழுக்க முழுக்க டெஸ்ட் கிரிக்கெட் கதைக்களம் கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளது.