"என் மகனை எப்படி வளர்த்தேன் தெரியுமா ?"-நடிகர் மாதவன் அதிரடி
May 13, 2026, 06:00 IST
தென்னிந்திய படவுலகை தொடர்ந்து பாலிவுட்டிலும் நடித்து வருபவர், மாதவன். தவிர திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருக்கிறார். இந்தியில் அவர் நடித்த ‘துரந்தர்’ என்ற படத்தின் 2 பாகங்களும் வெற்றிபெற்று, வசூலிலும் மகத்தான சாதனை படைத்தன. இந்நிலையில் மாதவன் அளித்துள்ள பேட்டி வருமாறு:
குழந்தைகளை பாதுகாப்பாக வளர்த்து, இந்த உலகின் யதார்த்தத்தை முன்கூட்டியே புரிய வைப்பதுதான் சிறந்தது. என் மகன் வேதாந்துக்கு சிறுவயதிலேயே ஒரு முதிர்ந்த நபரை போல் மதிப்பளித்து வளர்த்தேன். பெற்றோர்கள் பேச தயங்கும் பாலியல் ரீதியான தொடுதல், பாலியல் பாதுகாப்பு, கருத்தடை போன்ற விஷயங்களை பற்றி, வேதாந்தின் 4 வயதில் இருந்தே வெளிப்படையாக பேசி வருகிறேன். இது அவருக்கும், எனக்குமான நம்பிக்கையை அதிகரித்தது. வெளிப்படையான இந்த அணுகுமுறை அவருக்கு என்மீது அதிக மரியாதையை ஏற்படுத்தியது. அதோடு, அவரை ஒரு பொறுப்புள்ள இளைஞனாக மாற்றவும் உதவியது.