ராகவா லாரன்ஸுக்கு வில்லனாகும் நடிகர் மாதவன்?
Dec 10, 2024, 18:35 IST
நடிகர் மாதவன் பென்ஸ் திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பென்ஸ் எனப் பெயரிட்டுள்ளனர். எல்சியூ திரைப்படமாக இது உருவாகும் என லோகேஷ் அறிவித்திருந்தார். மேலும், படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகவும் அனிருத், சாம் சிஎஸ், சாய் அபயங்கர் ஆகியோர் இசையமைக்க உள்ளனர்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாகவே உருவாக உள்ள நிலையில் இப்படத்தின் வில்லனாக நடிகர் மாதவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ், மாதவன் மற்றும் மூன்று இசையமைப்பாளர்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.