×

இந்தியாவிற்காக பதக்கங்களை குவிக்கும் மாதவனின் மகன்... ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு !

 

இந்தியாவிற்காக தனது மகன் 5 தங்க பதக்கங்களை குவித்துள்ளதாக நடிகர் மாதவன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருப்பவர் மாதவன். அவரது 17 வயது மகன் வேதாந்த் தற்போது விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்து வருகிறார். நீச்சல் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், சிறு வயது முதலே பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதனால் இந்தியாவின் சார்பில் பல சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்துக் கொண்டு விளையாடி வருகிறார். 

சமீபத்தில் கூட இந்தியாவில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில்  36 மாநிலங்கள் பங்கேற்றன. 5 ஆயிரம் வீரர்கள் கலந்துக்கொண்ட வேதாந்த்தும் கலந்துக்கொண்டார். சிறப்பாக விளையாடிய அவர் 5 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றார். இந்நிலையில் மலேசியாவில் நடைபெற்ற மலேசியன் இன்விடேஷனல் ஏஜ் குரூப் சாம்பியன் ஷிப் போட்டியில் 5 தங்க பதக்கங்களை வேதாந்த் வென்றுள்ளார்.

 

இது குறித்து தனது ட்விட்டர் பகக்கத்தில் பெருமிதத்துடன் நடிகர் மாதவன் தெரிவித்தள்ளார். அதில் மலேசிய நாட்டில் நடைபெற்ற ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் போட்டியில் வேதாந்த், நான்கு பிரிவுகளில் கலந்துக்கொண்டார். இந்த போட்டியில் 5 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.