லியோ பேனர்கள் வைக்க தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Oct 17, 2023, 16:33 IST
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கம் இப்படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். படத்தில் அர்ஜுன், திரிஷா, சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்திலிருந்து மூன்று பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் படம் வெளியாக இருக்கிறது.
படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே சமயம் படத்திற்கு எதிராக சர்ச்சைகளும் கிளம்புகின்றன. இந்த நிலையில் படம் தொடர்பாக எந்தவித பேனர்களும் வைக்கப்படக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.