×

விஷால் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான மகுடம் -விமர்சனம்

 

சென்னையில் மெடிக்கல் ரெஃப் ஆக இருக்கும் கிருபாகரன் (விஷால்), தனது மனைவி துஷாரா விஜயன் மற்றும் மகன், மகளுடன் நிம்மதியாக வசித்து வருகிறார். குறைந்த சம்பளம் என்றாலும், குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்ற ஒரு கார் வாங்குகிறார். விசாகப்பட்டினத்தை கதிகலங்க வைக்கும் மிகப்பெரிய கேங்ஸ்டர் லிங்கா (இன்னொரு விஷால்), கப்பலில் வருகிற பொருட்களை கடத்துவது தொடர்பான பஞ்சாயத்தில் பலரது பகையை சம்பாதிக்கிறார். கிருபாகரனின் காரும், லிங்காவின் கடத்தலும் எதிர்பாராமல் ஒரு புள்ளியில் சந்திக்கிறது.

அவர்களுக்கு இடையே என்ன சம்பந்தம்? நிம்மதியாக வசித்த கிருபாகரனின் குடும்பமும், லிங்காவின் சாம்ராஜ்யமும் எதிரிகளால் என்ன ஆகிறது என்பது கிளைமாக்ஸ். முழுநீள கமர்ஷியல் ஆக்‌ஷன் கதையுடன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள விஷால், லாஜிக் பற்றி கவலைப்படவில்லை. அமைதியான கிருபாகரன், ஆக்ரோஷமான லிங்கா மற்றும் லிங்காவின் நடுத்தர வயது என்று, மூன்று கதாபாத்திரங்களிலும் வித்தியாசம் காட்டி நடித்துள்ளார். லிங்காவாக வரும் விஷாலின் சண்டைக் காட்சிகள் ஓவர்டோஸ் என்றாலும், ஜனரஞ்சக படம் என்பதால் ரசிக்க முடிகிறது.