×

விக்ரமுக்கு நிகர் வேறு யாருமில்லை- மாளவிகா மோகனன்

 
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இதில் நடிகை மாளவிகா மோகனன் பேசுகையில், '' இது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணம். தங்கலான் என் இதயத்தின் ஒரு பகுதி. என்னுடைய கலை உலக பயணத்தில் இதற்கு முன் இப்படி ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில்லை. இந்த ஒன்றரை ஆண்டு கால பயணம் மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. இந்த திரைப்படத்தில் பணியாற்றிய போது மனிதநேயமிக்க கலைஞர்களை சந்தித்தேன். ஆரத்தி என்ற கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநர் ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வேடத்தை வழங்கியதற்காக மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன் இந்திய சினிமாவில் இதுபோன்ற கதாபாத்திரத்தை யாரும் ஏற்று நடிக்கவில்லை என நினைக்கிறேன். விக்ரமுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாது. சக நடிகையை சௌகரியமாக ...அக்கறையுடன் .. அரவணைத்து பணியாற்ற வைப்பதில் விக்ரமுக்கு நிகர் வேறு யாருமில்லை. தங்கலான்- ஒரு கூட்டு முயற்சி. இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.'' என்றார்.