☰
×

விஜய் சேதுபதி மிகவும் அக்கறையுள்ள, விட்டுக்கொடுக்கும் நடிகர் -இப்படி கூறுவது எந்த நடிகை தெரியுமா ? 

 

தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் படம், ‘பாக்கெட் நாவல்’. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி.ஷெட்டி நடிக்கின்றனர். இளையராஜா இசை அமைக்கிறார். இதில் நடித்தது குறித்து மாளவிகா மோகனன் கூறுகையில், ‘சில படங்கள் உருவாகும்போது, அவை தனக்கான ஒரு குட்டி உலகமாகவே மாறிவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு அற்புதமான படத்தின் அங்கமாக இருந்ததை நினைத்து நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். மாதக்கணக்கில் ஒரு குழுவுடன் தினமும் பல மணி நேரங்களை பகிர்ந்துகொள்கிறோம். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறோம். ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோம். மணிக்கணக்கில் பேசுகிறோம். நல்ல நாட்களையும், கடினமான நாட்களையும் கடக்கிறோம்.

உணர்ச்சிப்பூர்வமான ஏற்ற, இறக்கங்களை ஒன்றாகவே எதிர்கொள்கிறோம். நமக்கு தெரியாமலேயே அவர்கள் நம் சொந்த வீட்டுக்கு அப்பால் மற்றொரு வீடாக மாறிவிடுகிறார்கள். விஜய் சேதுபதி மிகவும் அக்கறையுள்ள, விட்டுக்கொடுக்கும் சக நடிகராக இருந்ததற்கு மனமார்ந்த நன்றி. எவ்வளவு நேரமானாலும், எவ்வளவு கடினமாக இருந்தாலும், நான் எனது நடிப்பை சரியாக கொண்டு வர எனக்கு அவ்வளவு ஊக்கமும், இனிமையான அணுகுமுறையும் அளித்து, ஒரு வசதியான கம்போர்ட்டான சூழலை உருவாக்கி தந்தார். நாங்கள் ஏற்கனவே ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தாலும், ஒரே திரையை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.