×

கொள்ளை அழகால் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிக்கும் ‘மாளவிகா மோகனன்’.

 

கிளாமர் லுக், ஹோம்லி லுக் என விதவிதமான புகைப்படங்களை வெளியிடும்  நடிகை மாளவிகா மோகனன் தற்போது கள்ளம் கபடமற்ற  சிரிப்புடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மலையாளத்து பைங்கிளியான மாளவிகா 2013ஆம் ஆண்டு துல்கருடன் இணைந்து ‘பட்டம் போலே’ எனும் மலையாள படம் மூலமாக தனது திரை வாழ்வை துவங்கினார். அடுத்தடுத்து படங்கள் நடித்துவந்த மாளவிகா தமிழில் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் பூங்கொடியாக நடித்து நமக்கு அறிமுகமானவர்.  தொடர்ந்து மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இவர் தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரமுடன் இணைந்து ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பு ஒரு புறம் இருந்தாலும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா தற்போது செம கியூட் சிரிப்புடன் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட் எமோஜிகளை கொடுத்து வருகின்றனர்.