மாளவிகா மோகனனின் கலக்கும் புகைப்படங்கள்
Sep 27, 2023, 13:53 IST
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பட்டம் போல' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அடுத்து, தனுஷூடன் மாறன், விக்ரமுடன் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நாள் தோறும் விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவர்ந்து வருகிறார் மாளவிகா. அந்த வகையில் பச்சை உடையில் அவர் வெளியிட்டுள்ள பதிய புகைப்படங்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.