இளம்பெண்ணை ஏமாற்றியதாக மலையாள நடிகர் கைது...!
May 20, 2025, 14:52 IST
திருமணம் செய்வதாக இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கில் பிரபல மலையாள நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்னத்திரை தொடர்களின் மூலம் கவனம் பெற்றவர் நடிகர் ரோஷன் உல்லாஸ். இவர் தட்டம்புரத்து அச்சுதன், ஓட்டம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இவரும் திருச்சூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் எர்ணாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, ரோஷன் உல்லாஸைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில், இளம்பெண்ணுடன் உறவில் இருந்தது உறுதியாகியுள்ளது.