×

"தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார்கள் போலியானவை" - மலையாள நடிகர் ஜெயசூர்யா திட்டவட்டம்

 
தன் மீதான பாலியல் புகார்களை மலையாள நடிகர் ஜெயசூர்யா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி, கேரள அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதனைத் தொடர்ந்து, நடிகைகளிடம் அத்துமீறியதாக நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் ஜெயசூர்யா, தம் மீது சுமத்தப்பட்டுள்ள இரண்டு பாலியல் புகார்கள் போலியானவை. குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியில் எதிர்கொள்வேன் என குறிப்பிட்டு உள்ளார்.சொந்த காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாகவும், உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை யார் வேண்டுமானாலும் யார் மீதும் சுமத்த முடியும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தன் மீதான போலியான பாலியல் புகார்கள் மனரீதியில் வலியை ஏற்படுத்துவதாகவும், உண்மையை விட பொய்தான் வேகமாக பரவுவதாகவும் கூறியுள்ளார்.மேலும், நீதித்துறையின் மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் ஜெயசூர்யா குறிப்பிட்டுள்ளார்.