மலையாள நடிகை அஞ்சு குரியனுக்கு நிச்சயதார்த்தம்...!
Oct 26, 2024, 19:50 IST
மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையான அஞ்சு குரியன், தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு ஜூலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் வுல்ஃப் படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அஞ்சு குரியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.