கஞ்சா பயன்படுத்தியாக பிரபல மலையாள இயக்குனர்கள் கைது...
Apr 27, 2025, 12:38 IST
மலையாள இயக்குநர்களான காலித் ரஹ்மான், அஷ்ரஃப் ஹம்சா ஆகியோர் கஞ்சா பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைப்ரிட் கஞ்சாவுடன் இரண்டு பிரபல இயக்குநர்கள் உட்பட மூன்று பேர் கொச்சியில் கைது செய்யப்பட்டனர். இயக்குநர்கள் காலித் ரஹ்மான், அஷ்ரஃப் ஹம்சா தவிர ஷாலிஃப் முகமது என்பவரும் கைது செய்யப்பட்டார். நள்ளிரவில் எக்ஸைஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையில் இவர்கள் சிக்கினர். 1.6 கிராம் ஹைப்ரிட் கஞ்சா இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. அளவு குறைவாக இருந்ததால் கைதுக்குப் பிறகு அவர்கள் ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கஞ்சா பயன்படுத்தியதால் இளம் இயக்குனர்கள் கைது செய்யப்பட்டது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.