×

தமிழில் ரிலீசாகும் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘துடரும்’... தமிழ் டிரெய்லர் ரிலீஸ்...!

 

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘துடரும்’ திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ள நிலையில் தமிழ் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  

தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா உள்ளிட்ட பலர் நடிபில் வெளியான திரைப்படம்  ‘துடரும்’. இப்படம் கேரளாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை உலகளவில் வசூலில் 100 கோடியை கடந்துவிட்டது. மலையாளத்தில் கிடைத்த வரவேற்பை முன்வைத்து தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.


அதே போல் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு மே 9-ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் டப்பிங்கிற்கு ‘தொடரும்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதனை மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். தற்போது தமிழ் ட்ரைலரை மோகன்லால் வெளியிட்டுள்ளார்.