"நான் அதிரடி ஆக்ஷன் காட்சியில் நடிப்பதை விரும்புகிறேன்"-இப்படி கூறும் நடிகை யார் தெரியுமா ?
Feb 18, 2026, 08:00 IST
மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் நடித்து, கடந்த ஜனவரி 9ம் தேதி திரைக்கு வந்த பான் இந்தியா படம், ‘தி ராஜா சாப்’. இதில் சண்டைக் காட்சியில் நடித்த மாளவிகா மோகனனுக்கு ‘டூப்’ வைத்து படமாக்கிவிட்டு, பிறகு அவரே ஒரிஜினலாக நடித்ததாக சொல்கிறார்கள் என்ற தகவல் பரவியது.
இதற்கு ஆவேசத்துடன் பதிலளித்த மாளவிகா மோகனன் கூறியதாவது:
நான் ஒரிஜினலாக ஸ்டண்ட் செய்யவில்லை என்றும், ‘டூப்’ வைத்து நடித்ததாகவும், இதில் எனக்கு இரட்டையராக இருந்த ஸ்டண்ட் கலைஞரின் போட்டோ இணையதளங்களில் பரவி வருவதையும் நான் பல்வேறு பதிவுகளில் பார்த்தேன். நான் அதிரடி ஆக்ஷன் காட்சியில் நடிப்பதை மிகவும் விரும்புகிறேன். எனது சிறுவயதில் இருந்தே உடல்ரீதியான சவால்களை சந்திப்பதிலும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதிலும் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் ஒரிஜினலாக ஸ்டண்ட் காட்சியில் நடித்தாலும், ஸ்டண்ட் டபுள் என்று சொல்லப்படும் ‘டூப்’ கலைஞர்கள் இருப்பார்கள். அந்த சண்டைக் காட்சியில் நடிப்பது ஹீரோவுக்கு மிகவும் ஆபத்தானது என்று நினைக்கும்போது, உடனே அந்த கலைஞர்கள் ஓடி வந்து பல்வேறு உதவிகள் செய்வார்கள்.