"பிரதீப் ரங்கநாதனிடம் நடிப்பில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்"-மமிதா பைஜூ
Oct 17, 2025, 08:00 IST
டியூட் படத்தின் விழாவில் அந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர் .அப்போது
மமிதா பைஜூ பேசுகையில், ‘பிரதீப் ரங்கநாதனிடம் நடிப்பு சம்பந்தமாக நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். சில காட்சிகளில் நடிக்கும்போது எனக்கு பயமாக இருந்தது. அப்போது சரத் சார் எனக்கு தைரியமூட்டினார்’ என்றார். பிரதீப் ரங்கநாதன் பேசும்போது, ‘இதில் நடிக்க ஒப்புக்கொண்ட சரத் சாருக்கு நன்றி. நான் பார்த்து வளர்ந்த ஒரு ஹீரோவுடன் நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை. அவரது வயதும், எனர்ஜியும் எனக்கு இன்ஸ்பிரேஷன்.
‘லவ் டுடே’ படத்துக்காக ஹீரோயின் தேடியபோது, மமிதா பைஜூவை ஒரு ஷார்ட் பிலிமில் பார்த்தேன். பிறகு அவரை அணுகியபோது, பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘வணங்கான்’ படத்தில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது. ஆனால், ‘டியூட்’ படத்தில் மமிதா பைஜூ நடிக்கிறார் என்று கீர்த்தீஸ்வரன் சொன்னபோது சர்ப்ரைஸாக இருந்தது. நேஹாவும் அற்புதமாக நடித்துள்ளார்.
டிராவிட், ரித்து, ரோகிணி மேம் என படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நிச்சயம் ஒரு பெரிய இயக்குனராக கீர்த்திஸ்வரன் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை. அவரை என் தம்பி போலதான் பார்க்கிறேன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் தயாரிப்பாளர்களுக்கும் படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டு என்னை பாடவும் வைத்த சாய் அபயங்கருக்கும் நன்றி. தீபாவளியை ‘டியூட்’ படத்துடன் கொண்டாடுங்கள்’ என்றார்.