‘மாமே சவுண்ட் ஏத்து...’ அனிருத் குரலில் 'குட் பேட் அக்லி' படத்தின் ‘காட் ப்ளஸ் யூ’ பாடல் ரிலீஸ்...!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள குட் பேட் அக்லி படத்தின் 2வது பாடல் ‘காட் ப்ளஸ் யூ’
வெளியானது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். முன்னதாக படத்தில் இருந்து அஜித்தின் லுக் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அதில் அஜித் மாறுபட்ட தோற்றத்தில் உடல் எடை குறைத்து இளமையாக இருந்தார். அது அவரது ரசிகர்களை குஷி படுத்தியது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் மீதான எதிர்பர்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து டீசர் மேக்கிங் வீடியோ வெளியானது. அடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘ஓஜி சம்பவம்’(OG Sambavam) சமீபத்தில் வெளியானது.