விஷ்ணு விஷாலுடன் ஜோடி சேரும் மமிதா பைஜு... டைட்டில் & பர்ஸ்ட் லுக் இன்று மாலை ரிலீஸ்...!
Mar 15, 2025, 14:23 IST
நடிகர் விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் மமிதா பைஜு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி, 'பிரேமலு' படத்தின் மூலம் பிரபலமானவர் மமிதா பைஜு. அதைத்தொடர்ந்து, மமிதா பைஜுவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதன்படி, மமிதா பைஜு தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ’ரெபல்' படத்தில் அறிமுகமானார். தற்போது விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திலும் நடித்து வருகிறார். தென் இந்திய திரையுலகில் மளமளவென முன்னேறி வரும் மமிதா பைஜு தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளார்.