☰
×

இலவச மருத்துவ உதவிகளை செய்து வரும்  மம்மூட்டி -சமீபத்தில் செய்த உதவி என்ன தெரியுமா ?

 

மலையாள மூத்த நடிகர் மம்முட்டி, நடிப்பை தாண்டி தனது கேர் அண்ட் ஷேர் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் அறக்கட்டளை மூலமாக பலருக்கும் இலவச மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் நேபாளத்தை சேர்ந்த டல்லோ சவுத் என்பவர் அவரது 17 வயது மகன் விக்ரம் உள்ளிட்ட குடும்பத்தினருடன், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வேலை தேடி கேரளாவின் வயநாடு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு முன்னாள் எம்.எல்.ஏ, சி.கே.சசீந்திரன் என்பவரின் தோட்டத்தில் அவர்கள் வேலை செய்து வந்தனர்.

அந்த நேரத்தில் மகன் விக்ரமுக்கு இதயத்தில் பிரச்னை இருப்பது தெரியவந்தது. இந்த தகவலை மம்முட்டியிடம் கொண்டு சென்றார் சி.கே.சசீந்திரன். உடனடியாக எர்ணாகுளம் ஆலுவாவில் உள்ள ராஜகிரி மருத்துவமனையில் அந்த சிறுவனுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார் மம்மூட்டி. அதன்படி அந்த இளைஞருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டு, இதயத்தில் இருந்த பிறவிக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது.