"தனுஷின் நடிப்பை பார்த்து நான் பொறாமைப்பட்டேன்"-மம்மூட்டி வெளியிட்ட தகவல்
ஓம் படத்தில் நடித்தது குறித்து மம்மூட்டி கூறுகையில், ‘ஏழு வருடங்களுக்கு பிறகு நான் நடித்துள்ள தமிழ் படம் இது. கடைசியாக ‘பேரன்பு’ என்ற படத்தில் நடித்திருந்தேன். அதற்கு பிறகு தமிழில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுக்க யாரும் முன்வரவில்லை. நிறையபேரிடம் வாய்ப்பு கேட்டும் கூட, யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. ராஜ்குமார் பெரியசாமி கேட்டபோது, எனக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. காத்திருக்க சொன்னேன்.
அப்படி அவர் காத்திருந்ததால் இந்த படத்தில் நடித்தேன். இது எனக்கு ஸ்பெஷலான ஒரு படம். ரஜினிகாந்த் சாருடன் நடித்தேன். இப்போது தனுஷுடன் நடித்துள்ளேன். விரைவில் அவரது மகன் நடிக்கும் படத்திலும் நடிக்க வேண்டும். தனுஷின் நடிப்பை பார்த்து நான் பொறாமைப்பட்டேன். சண்டைக் காட்சியில் சாய் பல்லவி புரூஸ்லீ மாதிரி சூப்பராக நடித்துள்ளார். அதை பார்க்கும்போது மற்ற ஹீரோக்கள் எல்லாம் தோற்றுவிடுவார்கள்’ என்றார்.