×

 மோகன்லால் இயக்கி நடித்துள்ள 'பரோஸ்' படத்துக்கு மம்முட்டி வாழ்த்து!

 

மோகன்லால் இயக்கியுள்ள ‘பரோஸ்’ வெளியீட்டை முன்னிட்டு மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் ‘பரோஸ்’ இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னிட்டு மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ”தனது நடிப்பு திறமையால் நம்மை கவர்ந்த மோகன்லால், இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் ‘பரோஸ்’. அவருடைய அசாத்திய அனுபவமும் ஞானமும் இந்தப் படத்துக்குப் பலன் தரும் என்று நான் நம்புகிறேன். என் அன்பான மோகன்லாலுக்கு வெற்றி கிடைக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.