×

மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' டிரெய்லர் ரிலீஸ் 

 

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' திரைப்படம் வருகிற 23-ந் தேதி வெளியாக உள்ளது. கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி . இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'டர்போ' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தையடுத்து, மம்முட்டி 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இது இவர் இயக்கும் முதல் மலையாளப் படமாகும்.

<a href=https://youtube.com/embed/R9TaHgLahHs?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/R9TaHgLahHs/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">
இப்படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மம்முட்டியே தயாரிக்கிறார். லீனா, சித்திக், கோகுல் சுரேஷ், விஜய் பாபு மற்றும் விஜி வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி தொடர்பான கதைக்களத்தில் உருவாகி உள்ளது. சமீபத்தில் `டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.