மம்மூட்டி நடித்துள்ள 'பசூக்கா' படத்தின் ப்ரீ ரிலீஸ் டீஸர் ரிலீஸ்...
Apr 9, 2025, 12:31 IST
மம்மூட்டி நடித்துள்ள பசூக்கா படத்தின் ப்ரீ ரிலீஸ் டீஸர் வெளியாகி உள்ளது.
டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.