×

ஜெயிலர் வில்லனுக்கு வில்லனாகும் மம்மூட்டி..?
 

 
நடிகர் மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தன் 7-வது படத்தை தயாரிக்கிறது. துல்கர் சல்மானின் 'குரூப்' படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகன் நடிக்கிறார். விநாயகனுக்கு வில்லனாக நடிகர் மம்முட்டிநடிக்கிறார். 'புழு, பிரம்மயுகம்' போன்ற படத்தில் வில்லனாக நடித்து அசத்திய மம்முட்டி, மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் துவங்கியுள்ளது. இந்த நிலையில், இதை அதிகாரப்பூர்வமாக மம்மூட்டி கம்பெனி நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. படத்தை பற்றிய இணைய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் பிற நடிகர்கள் குறித்து தகவல் விரைவில் வெளியாகும். படத்தின் ஒளிப்பதிவை ஃபைசல் அலி மேற்கொள்ளவுள்ளார்.