×

லோகேஷ் கனகராஜின் எல்.சி.யுவில் இணைய விரும்பும் மம்முட்டி

 
நடிகர் மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியான படம் 'காதல் தி கோர்'. நடிகர் மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'காதல் தி கோர்'. இத்திரைப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கினார். முன்பு நடந்த இப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தில் நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மம்முட்டி, 'படக்குழு என்னை இதுவரை அணுகவில்லை. ஆனால், எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம், மேலும் எல்.சி.யுவிற்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்' என்றார். இதனையடுத்து, வரவிருக்கும் எல்.சி.யு படங்களில் மம்முட்டி நடிப்பாரா? என்பதை பொருத்திருந்து காணலாம். சமீபத்தில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படம் எல்.சி.யுவில் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.