×

4 மொழிகளில் 4 பிரபலங்கள்… மாநாடு புரமோஷனில் படக்குழு…

மாநாடு படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷனில் படக்குழு ஈடுபட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங், சென்னை, பாண்டிச்சேரி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.
 

மாநாடு படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷனில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங், சென்னை, பாண்டிச்சேரி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மாநாடு படத்தின் டீசர் தனது பிறந்தநாளில் வெளியாகும் என சிம்பு ஏற்கனவே அறிவித்திருந்தார். இதையடுத்து படத்தின் டீசர் நாளை மதியம் 2.34 வெளியிடப்படுகிறது. தொடர்ந்து மாநாடு படத்தின் புரமோஷனிலும் படக்குழு ஈடுபட்டுள்ளது. 5 மொழிகளில் உருவாகும் மாநாடு படத்தின் டீசரை இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதன்படி இந்தியில் பிரபல இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் வெளியிடுகிறார். இவர் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதேபோன்று தெலுங்கில் நடிகர் ரவி தேஜாவும், கன்னடத்தில் நடிகர் சுதீப்பும், மலையாளத்தில் பிருத்விராஜூம் தனிதனியே வெளியிடுகின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.