×

அரசியலை விட பரபரப்பாகும் மாநாடு படக்குழு… டீசரை வெளியீடுகிறார் ஆஸ்கார் நாயகன் !

மாநாடு படத்தின் தமிழ் டீசரை யார் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தநிலையில் அதை, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிடுகிறார். சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் கல்யாணி பிரியதர்ஷன், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட மாநாடு படத்தின் பணிகள் சிம்புவின் கால்ஷூட் பிரச்சனையால் தாமதமாகி, தற்போது
 

மாநாடு படத்தின் தமிழ் டீசரை யார் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தநிலையில் அதை, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிடுகிறார்.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் கல்யாணி பிரியதர்ஷன், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

நீண்ட நாட்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட மாநாடு படத்தின் பணிகள் சிம்புவின் கால்ஷூட் பிரச்சனையால் தாமதமாகி, தற்போது வேகமாக ஷூட்டிங் நடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் கடைசியாக பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. ஏற்கனவே மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மாநாடு படத்தின் டீசர் தனது பிறந்தநாளில் வெளியாகும் என சிம்பு ஏற்கனவே அறிவித்திருந்தார். இதையடுத்து படத்தின் டீசர் நாளை மதியம் 2.34 வெளியிடப்படுகிறது. தொடர்ந்து மாநாடு படத்தின் புரமோஷனிலும் படக்குழு ஈடுபட்டுள்ளது.

அதன்படி இந்தியில் பிரபல இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப்பும், தெலுங்கில் நடிகர் ரவி தேஜாவும், கன்னடத்தில் நடிகர் சுதீப்பும், மலையாளத்தில் பிருத்விராஜூம் தனிதனியே வெளியிடுகின்றனர். இதையடுத்து தமிழில் யார் வெளியிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் மாநாடு படத்தின் தமிழ் டீசரை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.