குவியும் பட வாய்ப்புகள்!- நக்கலைட்ஸ் குழுவுடன் கைகோர்த்த மணிகண்டன்.
Dec 19, 2023, 15:40 IST
நடிகர் மணிகண்டன் தனது அடுத்து படத்திற்காக நக்கலைட்ஸ் குழுவுடன் இணைந்துள்ளார். அது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெய்பீம், குட்நைட் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் மணிகண்டன். இவர் தற்போது ‘லவ்வர்’ எனும் படத்தில் நடித்துவருகிறார். இதனை தொடர்ந்து பிரபல யூடியூபரான ராஜேஷ்வர் காளிதாச் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார். அந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகைசான்வி மேக்னா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இது குறித்து கூறிய படத்தின் இயக்குநர் “படம் கோயபுத்தூர பின்னணியில் உருவாகும் காமெடி கலந்த குடும்ப படம். இதற்கு மணிகண்டனின் இயல்பான நடிப்பி பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரை தேர்வு செய்தோம்” என கூறியுள்ளார்.