×

மணிகண்டனின் லவ்வர்... புதிய படத்தின் அறிவிப்பு.. 

 

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் மணிகண்டன், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் தற்போது கல்லூரி மாணவராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். பீட்சா 2, விக்ரம் வேதா, காலா என பல படங்களில் சிறுசிறு வேடத்தில் நடித்து அசத்திய மணிகண்டனுக்கு நல்ல பெயரை வாங்கிகொடுத்த படம் ‘ஜெய்பீம்’. அந்த படத்தில் மணிகண்டனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து ‘குட்நைட்’ எனும்படத்தில் நடித்தார்.  இந்த நிலையில் தற்போது இயக்குநர் பிரபுராம் இயக்கத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார் மணிகண்டன்.

இந்த புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் வௌியாகி உள்ளது. படத்திற்கு லவ்வர் என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.