×

மணிரத்னம் - கமல் கூட்டணியில் இணைந்த சிம்பு... வேற லெவல் செல்லும் ‘KH 234’ !

 

 மணிரத்னம் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருப்பவர் கமலஹாசன். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்தில் முடிக்கும் அவர், விரைவில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ‘நாயகன்‘ சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. 

கமலின் 234வது படமாக உருவாகும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது.

ஏற்கனவே திரைக்கதை இறுதி செய்யும் பணிகளை மணிரத்னம் முடித்துவிட்டார். தற்போது நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வை அவர் நடத்தி வருகிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க வித்யாபாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதேபோன்று பல மாநில மொழி நட்சத்திரங்களையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.