‘மனிதர்கள்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்..!
Jul 17, 2025, 06:05 IST
‘கிரவுட் பண்டிங்’ மூலமாக சிறிய பட்ஜெட்டில் படங்களை எடுப்பது தற்போது அதிகமாகியுள்ளது. அப்படி எடுத்த லூசியா உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்று பல இளம் இயக்குனர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளன.
அந்த வகையில் இளம் இயக்குனர் இராம் இந்திரா தனது நண்பர்கள் துணையோடு சிறிய பட்ஜெட்டில் சுயாதீனப் படமாக எடுத்துள்ள ‘மனிதர்கள்’ திரைப்படம் மே 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நல்ல முயற்சி என்ற பாராட்டைப் பெற்றாலும் இந்த படம் திரையரங்குகளில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
இந்நிலையில் இப்போது இந்த படம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா ஓடிடி ஆகியவற்றில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.