×

 நடிகை மஞ்சு வாரியரின் உயிரை  காப்பாற்றிய நடிகர் -யார் தெரியுமா ?

 
ஒரு ஷூட்டிங்கில் நடிகை மஞ்சு வாரியரை காப்பாற்றிய சம்பவத்தை நடிகர் மனோஜ் கே .ஜெயன் நம்மோடு பகிர்ந்து கொண்டார் 
சல்லாபம் என்கிற மலையாள திரைப்படத்தின் மூலம்தான் மஞ்சு வாரியர் அறிமுகமானார். தனது முதல் படம் என்கிற எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் மிகவும் யதார்த்தமாக நடித்திருந்தார். இந்த நிலையில், அப்படத்தில் மஞ்சு வாரியருடன் இணைந்து நடித்த நடிகர் மனோஜ் கே. ஜெயன், அப்படத்தில் நடந்த ஷாக்கிங் சம்பவம் குறித்து இப்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.
‘‘சல்லாபம் படம் துவங்கி கிட்டத்தட்ட 24 நாட்கள் ஆன நிலையில், அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஒரு ரயில்வே ட்ராக்கில் படப்பிடிப்பு நடந்தது. தன் காதல் கை கூடாத நிலையில், ஓடும் ரயிலில் விழுந்து தன் உயிரை மஞ்சு வாரியர் கதாபாத்திரம் மாய்த்து கொள்வதாக காட்சி இருந்தது. அந்த காட்சியில் நானும் இடம் பெற்று இருந்தேன். ஆனால், மஞ்சு வாரியர் வசனம் பேசியபடி தன்னை மறந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி ரயில் தண்டவாளத்தை நெருங்கி விட்டார்.அப்போது நான் மஞ்சுவின் கையை கெட்டியாக பிடித்து கொண்டதால் அவர் ரயில் மீது விழாமல் தப்பித்து கொண்டார் .இல்லையென்றால் அன்றே மஞ்சு ரயிலில் தவறி விழுந்திருப்பார் என்று நடிகர் மனோஜ் கே .ஜெயன் மஞ்சு வாரியாரி காப்பாற்றிய சம்பவத்தை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டார்