பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்புடன் பிறந்தநாள் கொண்டாடிய மஞ்சு வாரியர்
Sep 14, 2024, 19:10 IST
நடிகை மஞ்சு வாரியர் மற்றும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோர் தங்களது பிறந்தநாளை ஒன்றாக கொண்டாடியுள்ளனர். இருவரும் தங்களது பிறந்தநாளான செப்டம்பர் 20 ஆம் தேதி ஒன்றாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை நடிகை மஞ்சு வாரியர்தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் தற்போது தமிழிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் வில்லனாக நடித்த மகாராஜா திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. மஞ்சு வாரியர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.