×

ரஜினிகாந்த்-க்கு டூப் போட்ட மனோஜ்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்...!

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் மனோஜ் பணியாற்றி இருப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் எந்திரன். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

எந்திரன் படத்தில் இயக்குநர் ஷங்கருக்கு உதவி இயக்குநராக மனோஜ் பணியாற்றி இருக்கிறார். அதன்படி எந்திரன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்-க்கு மனோஜ் டூப்பாக நடித்துள்ளார். நேற்று (மார்ச் 25) மாலை மனோஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவர் எந்திரன் படத்தில் பணியாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
.