மன்சூர் அலிகான் ஹீரோவாக நடித்து, இசை அமைத்து தயாரித்த படம்-ரீ ரிலீஸ் ஆகிறது
மன்சூர் அலிகான் முதல்முறையாக ஹீரோவாக நடித்து, பாடல்கள் எழுதி இசை அமைத்து தயாரித்த படம், ‘ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’. இது 34 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. நடிகர் பாலு ஆனந்த் இயக்கியிருந்தார். தங்கர் பச்சான் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். ஷாகுல் சண்டைப் பயிற்சி அளித்தார். புலியூர் சரோஜா, சிவசங்கர், சலீம் பாபு, சம்பத் ராஜ் நடனக் காட்சி அமைத்தனர். ராசு கென்னடி திரைப்பட நிறுவனம் தயாரித்தது.
இதில் நந்தினி, சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, வடிவுக்கரசி, அபிலாஷா, ஷர்மிலி, நாகேஷ், வி.கே.ராமசாமி, நெப்போலியன், ஜெய்கணேஷ், வெ.ஆ.மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், குண்டு கல்யாணம், ஒரு விரல் கிருஷ்ணா ராவ், குள்ளமணி, கள்ளபார்ட் நடராஜன், டி.கே.எஸ்.நடராஜன், பாண்டு, நெல்லை சிவா, போண்டா மணி நடித்திருந்தனர்