×

மீண்டும் கலக்கும்  வடிவேலு , பகத் பாசில் கூட்டணி-வரவேற்பை பெற்ற மாரீசன் ட்ரைலர் 

 
'மாமன்னன்' படத்திற்குப் பிறகு வடிவேலு - பகத் பாசில் கூட்டணி இணைந்திருப்பதாலும், இந்த படத்திற்கான ட்ரெய்லரில் சிறிய அளவில் திருட்டுகளில் ஈடுபடும் ஒருவனுக்கும்... அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையேயான மறக்க இயலாத பயணம் தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருப்பதாலும்.. படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பார்வையாளர்களிடத்தில் எழுந்திருக்கிறது.
'மாரீசன் ' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, 'ஃபைவ் ஸ்டார்' கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார் .இப்படத்திற்கு வ.கிருஷ்ணமூர்த்தி கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார் .கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.இப்படத்தின் ட்ரைலர் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது . வேதாந்தம் தயாவுடன், வேலாயுதம் நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலைக்கு ஒரு பயணத்தை மேற்கொள்கிறார், அது அவர்களின் வாழ்க்கையை எதிர்பாராத விதங்களில் மாற்றுகிறது என்பதை  இப்படத்தின் ட்ரைலரில் கூறப்பட்டுள்ளது .இது நகைச்சுவை கலந்த இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது