☰
×

 மாரி செல்வராஜ் இயக்கும் புது படம் ‘மஞ்சணத்தி"-ஹீரோயின் யார் தெரியுமா ?

 

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ ஆகிய படங்களுக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படம் ‘மஞ்சணத்தி’. இப்படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். ஃபார்​சூன் என்​டர்​டெ​யின்​மென்ட் சுஷாந்த் பிர​சாத் தயாரிக்​கும் இப்படத்தை திவ்யா மாரி செல்வராஜ் வழங்குகிறார். பிரியங்கா மோகன், கயாடு லோஹர், கதிர், பூர்ணிமா ரவி, விது, ‘காக்கா முட்டை’ விக்னேஷ் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கடந்த செப்டம்பர் 7ம் தேதி தேனி மாவட்டத்தில் பூஜையுடன் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது. அந்நிகழ்வில் இளையராஜா கலந்துகொண்டு கிளாப் போர்டு அடுத்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

தற்போது இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கயாடு லோஹர் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சோஷியல் மீடியாவில், ‘ஒரு வித்தியாசமான உலகம், ஒரு வித்தியாசமான பள்ளி, ஒரு வித்தியாசமான நான். விஷயங்களை சற்று வித்தியாசமாக பார்க்க வைத்த ஒரு கதை சொல்லி இவர்’ என்று மாரி செல்வராஜை குறிப்பிட்டு கயாடு லோஹர் போட்டோவை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவில் மாரி செல்வராஜ், கயாடு லோஹர் இருவரும் ஒன்றாக நடந்து பேசி கொண்டே செல்கின்றனர்.