'தங்கலான்' படக்குழுவிற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து..!
Aug 15, 2024, 13:20 IST
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள தங்கலான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் தங்கலான் படக்குழுவிற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "லானே தங்கலானே வெல்கவே நீ ஆதியோனே. பா ரஞ்சித் அண்ணா, விக்ரம் சாரின் உழைப்பின் வழி பெரும் வெற்றிக்கு தயாராகும் மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களும் ப்ரியமும்" என்று பதிவிட்டுள்ளார்.