×

பாடகராக மாறிய இயக்குனர்... பட்டையை கிளப்பும் ‘ஐ லவ் யூடி’ லிரிக்கல் பாடல் !

 

‘மார்க் ஆண்டனி’ படத்தின் இரண்டாவது லிரிக்கல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

திரிஷா இல்லன்னா நயன்தாரா, பஹிரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். முதல் முறையாக டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த  இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.   

இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. 

இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் உள்ள இப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. ‘ஐ லவ் யூடி’ என்று தொடங்கும் அந்த பாடலை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ரோஷினி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

<a href=https://youtube.com/embed/_wk26MqUE8w?autoplay=1&mute=1&start=64><img src=https://img.youtube.com/vi/_wk26MqUE8w/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">