×

‘மார்க் ஆண்டனி’-ல் செல்வராகவன்.. மொரட்டுத்தனமான போஸ்டர் வெளியீடு !

 

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தில் மொரட்டுத்தனமாக தோற்றத்தில் இருக்கும் செல்வராகவனின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள ‘பஹிரா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவரின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் விஷால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். இவர்களுடன் ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படம் ஒரு ப்ரீயட் படமாக உருவாகி வருகிறது. அதாவது 1970-களில் நடப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட்டது. 

இந்நிலையில் இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வராகவனின் பிறந்தநாளையொட்டி மிரட்டலான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சிரஞ்சீவி என்ற கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடிக்கும் அந்த கதாபாத்திரத்தில் போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ய