×

டிஆரின் கர்ஜிக்கும் குரலில் 'அதிருதா' பாடல்...  பட்டையை கிளப்பும் 'மார்க் ஆண்டனி' ஃப்ர்ஸ்ட் சிங்கிள் !

 

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் ஒரு ப்ரீயட் படமாக உருவாகி வருகிறது. அதாவது 1970-களில் நடப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. திரிஷா இல்லன்னா நயன்தாரா, பஹிரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். 

மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பாடலை இயக்குனர் டி.ராஜேந்தர் கர்ஜிக்கும் குரலில் பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலின் தெலுங்கு வெர்ஷனை விஷால் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.