×

டைம் டிராவல் கதைக்களத்தில் விஷால் ‘மார்க் ஆண்டனி’.. மிரட்டலான டீசர் வெளியீடு ! 

 

 விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து மிரட்டும் மார்க் ஆண்டனி டீசர் வெளியாகியுள்ளது. 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன்,  ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படம் ஒரு ப்ரீயட் படமாக உருவாகி வருகிறது. அதாவது 1970-களில் நடப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மிரட்டலான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகிய இருவரும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர். டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.